தமிழ்நாடு

tamil nadu

'விசாரணை தற்போது வேண்டாம்' - அமலாக்கத் துறை நோட்டீசுக்கு அனில் அம்பானி கோரிக்கை

By

Published : Mar 17, 2020, 9:16 AM IST

மும்பை: யெஸ் வங்கி மோசடி தொடர்பாகத் தங்களை விசாரிக்க வேண்டும் என அமலாக்கத் துறை அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

Anil Ambani files adjournment application
Anil Ambani files adjournment application

யெஸ் வங்கியின் நிதிநிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி மார்ச் 5ஆம் தேதி யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. யெஸ் வங்கியின் கடன் வழங்கும் செயல்பாடும் முடக்கப்பட்டு அதன் முழு நிர்வாகத்தையும் தற்போது ரிசர்வ் வங்கி கையில் எடுத்துள்ளது. மார்ச் 18ஆம் தேதி முதல் யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கும், யெஸ் வங்கி மோசடிக்கும் தொடர்புள்ளதாக அவரை விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்த அமலாக்கத் துறை, இது தொடர்பான விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதற்கு அனில் அம்பானி தற்போது இந்த விசாரணை வேண்டாம் என்றும், சிறிது கால அவகாசம் வேண்டும் எனவும் அமலாக்கத் துறையிடம் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அப்பாடா பணவீக்கம் குறைஞ்சுடுச்சு!

ABOUT THE AUTHOR

...view details