78 கூடுதல் வழித்தடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் விமான போக்குவரத்துத் துறையை மேம்படுத்தும்விதமாக மத்திய அரசு 2016ஆம் ஆண்டு உடான் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, புதிய விமான நிலையங்கள், வழித்தடங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டுவருகின்றன.
இந்தத் திட்டம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், உடான் நான்காம் கட்ட திட்டம் தற்போது தயாராகியுள்ளது. அதன்படி புதிதாக 78 வழித்தடங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து நாட்டின் மொத்த வழித்தடம் 766ஆக அதிகரித்துள்ளது.