தமிழ்நாடு

tamil nadu

ரப்பர் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

By

Published : Jul 10, 2020, 1:28 AM IST

கன்னியாகுமரி: ஊதியம் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்ட கழகத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்
கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்ட கழகத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்

கன்னியாகுமரி மாவட்டம் அரசு ரப்பர் தோட்ட கழகத்தில் கீரிப்பாறை, காளிகேசம், மணலோடை உள்பட ஒன்பது பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.

இதில் ரப்பர் பால் வெட்டும் பணியில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் கீரிப்பாறை பிரிவில் வேலை பார்த்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்களுக்கு கடந்த மாத ஊதியம் கொடுக்கவில்லை என்ற குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து நிர்வாகத்திடம் கேட்டதற்கு, முறையான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து ரப்பர் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ரப்பர் பால் வெட்டும் தொழில் முற்றிலுமாக தடை பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருமணிமுத்தாறில் சாயப்பட்டறை கழிவுநீர் கலப்பு - விவசாயிகள் வேதனை

ABOUT THE AUTHOR

...view details