உலகளாவிய பெருந்தொற்றுநோயான கரோனா தமிழ்நாடு முழுவதும் பரவலாக அதிகரித்து வருகிறது. மூன்றாம் கட்ட பரவலை எட்டியுள்ள கோவிட்-19னை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாக சுகாதாரத் துறை கூறியுள்ளது.
சிவப்பு குறியீட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களிலும் தொற்றின் தாக்கம் மிகக் கடுமையாகி உள்ளது.
குறிப்பாக, மதுரையில் பாதிக்கப்படுவோர், உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் மதுரை மத்திய தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், வைரஸ் தொற்றால் அனுமதிக்கப்பட்டு குணமடைந்ததாக சொல்லி வீட்டிற்கு அனுப்பப்படும் நபர்களுக்கு மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்யப்படுவதில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.