இங்கிலாந்தில் நாளை மறுநாள் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. இந்தத் தொடருக்கு முன்னதாக, தற்போது பயிற்சிப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், பிரிஸ்டோல் நகரில் இன்று நடைபெற்ற 9ஆவது பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதிக் கொண்டன.
பயிற்சிப் போட்டியிலேயே மரண பயத்தை காட்டிய வெஸ்ட் இண்டீஸ்! - பயிற்சி போட்டி
நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய பயிற்சிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 421 ரன்களை குவித்து மற்ற அணிகளுக்கு மரண பயத்தை காட்டியுள்ளது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீச தீர்மானித்தார். முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் லெவிஸ், ஷாய் ஹோப், கேப்டன் ஹோல்டர், ரஸல் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 49.2 ஓவர்களில் 421 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 101, ரஸல் 54, இவின் லெவிஸ் 50 ரன்கள் அடித்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் போல்ட் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நெருங்கும் நேரத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி பயிற்சிப் போட்டியிலே 421 ரன்களை குவித்ததன் மூலம், மற்ற அணிகளுக்கு மரண பயத்தை காட்டியுள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர்.