இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியுறவுத் துறை அமைச்சருக்கு நேற்று மின்னஞ்சலில் அனுப்பிய கடிதத்தில் “சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த ஜூலை 23 ஆம் தேதி 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்களுடைய படகு எண் ஐசூனு-கூசூ-02 ஆஆ 2029. ரகு, லட்சுமணன், சிவகுமார், பாபு, பார்த்தி, கண்ணன், தேசப்பன், முருகன், எல்.தேசப்பன் ஆகியோர், துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு மணி நேரத்தில் அவர்களுடைய ஜிபிஎஸ் கருவி பழுதாகிவிட்டது.
ஜூலை 28 ஆம் தேதி வரை தொடர்பில் இருந்தனர். ஆகஸ்டு 7 ஆம் தேதி அவர்கள் கரைக்குத் திரும்பி இருக்கவேண்டும்.
ஆனால், அதன் பிறகு அவர்களிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லை. அதனால் அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் வேதனைக்குள்ளாயினர்.
53 நாள்கள் கழித்து செப்டம்பர் 13 ஆம் தேதி அவர்கள் மியான்மர் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி கிடைத்தையடுத்து நண்பர்கள், உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அவர்களை மீட்பதற்காக இந்திய அயல்உறவுத் துறை முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் கரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் திரும்பி வர முடியவில்லை.
மியான்மர் கடற்படையினர் அவர்களை தங்கள் நாட்டில் தரை இறங்க விடவில்லை. படகிலேயே இருக்கும்படி கூறிவிட்டனர்.