தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தேர்வை ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு கடிதம்

சென்னை: மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தேர்வை ரத்து செய்ய வேண்டி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

முதலமைச்சருக்கு கடிதம்
முதலமைச்சருக்கு கடிதம்

By

Published : Jun 4, 2020, 9:14 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "பதிலி எழுத்தரைக் கொண்டு தேர்வு எழுதக்கூடிய மாற்றுத்திறன் குழந்தைகள், தகுந்த இடைவெளி பின்பற்றுதல் காரணங்களால், ஒருவேளை தேர்வு எழுத முடியாமல் போனால், அவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க ஜூன் 1 அன்று நடைபெற்ற சிபிஎஸ்இ வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவ்வாரியத்தின் 2.6.2020 தேதியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கரோனா பேரிடர் ஊரடங்கு காலத்தில் மத்திய, மாநில அரசுகள் மாற்றுத்திறன் ஊழியர்களுக்கு உள்ள சிரமங்களை கணக்கில் கொண்டு, அவர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வயது வந்த மாற்றுத்திறனாளிகளுக்கே விதிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளபோது, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.



எனவே, அறிவிக்கப்பட்டுள்ள 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை முழுமையாகவோ அல்லது மாற்றுத்திறன் குழந்தைகளுக்காவது ரத்து செய்து, அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முதலமைச்சர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்" என அதில் கூறியுள்ளனர்.


ABOUT THE AUTHOR

...view details