தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பொதுமக்களுக்கு உதவி செய்ய காவல் துறை தயார்: எஸ்.பி. ஜெயக்குமார்!

தூத்துக்குடி: கரோனோ தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய காவல்துறை தயாராக உள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Thoothukudi SP Jayakumar Press Meet
Thoothukudi SP Jayakumar Press Meet

By

Published : Jul 25, 2020, 2:02 AM IST

Updated : Jul 25, 2020, 4:10 AM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து கரோனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில், துணைக்கு கண்காணிப்பாளர் கலைகதிரவன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் வணிகர்கள், பல்வேறு சமுதாய தலைவர்கள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது, கோவில்பட்டி பகுதியில் தொற்று பாதிப்பு உள்ள பகுதியில் தடுப்பு முறைகளை கடைபிடிப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தொற்றில் இருந்து தற்காத்து கொள்வது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

பின்னர் செய்தியாளரிடம் எஸ்.பி.ஜெயக்குமார் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில் கரோனோ தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறை அனைத்து உதவிகளையும் பொதுமக்களுக்கு செய்வதற்கு தயாராக உள்ளது.

பொதுமக்கள் காவல் நிலையங்ககளில் அளிக்கும் புகார்களை உடனுக்குடன் விசாரித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுகிறது. காவல்துறையில் ஒரு சிலர் தவறு செய்தாலும், அனைத்து காவலர்களும் தவறு செய்கிறார்கள் என கூறமுடியாது.

உயர் அலுவலர்கள் முதல் காவலர்கள் வரை அனைவரும் ஊக்கத்துடன் செயல்படுகின்றனர். கரோனோ தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:இந்தியாவில் 8 லட்சத்தை கடந்த குணமடைந்தவர்களின எண்ணிக்கை!

Last Updated : Jul 25, 2020, 4:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details