அரியலூர் அருகே தெற்கு சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் பால சுப்பிரமணியன் (19). இவர் தாமரைகுளத்தில் உள்ள ஐடிஐ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர், கல்லங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் (மைன்ஸ்) தேங்கியுள்ள நீரில் குளிக்க சென்றுள்ளார்.
சுரங்கத் தண்ணீரில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு!
அரியலூர்: அரசு சிமெண்ட் ஆலையின் சுரங்கத் தண்ணீரில் மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பால சுப்பிரமணியன்
அப்போது சுரங்க தண்ணீரின் நடுப்பகுதிக்குச் சென்ற பாலசுப்பிரமணியன் கற்கள் இடையே கால் சிக்கி நீச்சல் அடிக்க முடியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கயர்லாபாத் காவல்துறையினர் உடலை மீட்டு ஆய்வுக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கயர்லாபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.