குஜராத் மாநிலம் வாபியில் தேசிய அளவிலான தேக்வாண்டோ, ஸ்கேட்டிங் மற்றும் தடகள போட்டிகள் கடந்த 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைப்பெற்றது. இதில், தமிழ்நாடு ஆந்திரா, கேரளா, கர்நாடகா, குஜராஜ் உள்பட 18மாநிலங்களைச் சேர்நத் 1800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
தேசிய அளவிலான போட்டி - தமிழக மாணவ மாணவிகள் 35 பேர் தங்கம்
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான தேக்வாண்டோ, ஸ்கெட்டிங், தடகள போட்டிகளில் பங்கேற்ற தமிழக மாணவ, மாணவிகள் 35 பேர் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
தமிழகம் அணி சார்பில் சேலம் மகரிஷி மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோட்டைச் சேர்ந்த எஸ்.வி..பி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்நத மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகள் 14,17, மற்றும் 19வயது பிரிவுகளில் நடந்தப்பட்டது. இதில், தமிழ்நாட்டு சார்பில் தேக்வாண்டோ, ஸ்கேட்டிங், தடகள பிரிவில் மொத்தம் 35 தங்கபதக்கங்களை குவித்தன
குறிப்பாக, தேக்வாண்டோ பிரிவில் சேலம் மகரிஷி பள்ளியைச் சேர்ந்த லக்சனா, தீபக்ராஜா, லஷ்வின், சந்தோஷ் உள்ளிட்ட இருபத்தி ஒன்பது மாணவர்கள் தங்கம் வென்றனர். இதைத்தொடர்ந்து, தங்கப்பதக்கங்களுடன் குஜராத்தில் இருந்து ரயில் மூலம் சேலத்திற்கு திரும்பிய மாணவ, மாணவிகளை, அவரது பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், மாணவ, மாணவிகள் கேக் வெட்டி தங்களது வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.