தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 5, 2020, 12:09 PM IST

ETV Bharat / briefs

தனியார் பள்ளியில் கரோனா தனிமைப்படுத்தும் முகாம் - பொது மக்கள் எதிர்ப்பு

கன்னியாகுமரி : நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி அருகே பொது மக்கள் அதிகம் வாழும் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கரோனா தனிமைப்படுத்தும் முகாம் அமைப்பதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Public protest
Public protest

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளியூர்களிலிருந்து திரும்பும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்படுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால், ஏற்கனவே ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகளை விட கூடுதல் படுக்கை வசதிகள் தேவைப்படுவதால் தனியார் கல்லூரிகள், தனியார் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகிலுள்ள தனியார் பள்ளியில் கரோனா சிறப்பு தனிமைப்படுத்தும் முகாம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இதனை அறிந்து அப்பகுதி மக்கள் சில தினங்களுக்கு முன்பு பள்ளி வளாகத்திற்குள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்காத நிலையில் நேற்று (ஜூலை நான்கு) அப்பகுதியில் மீண்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தகுந்த இடைவெளியைக் கடைபிடித்தும், முககவசங்கள் அணிந்தும் திரண்டு, கையில் கருப்புகொடிகள் ஏந்தி மனித சங்கலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details