தமிழ்நாடு

tamil nadu

உலகக் கோப்பை: மோசமான சாதனையை பதிவு செய்த பாகிஸ்தான்

நாட்டிங்ஹாம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை வரலாற்றில் தனது இரண்டாவது குறைந்தபட்ச ரன்களை பதிவு செய்து மோசமான சாதனையை படைத்துள்ளது.

By

Published : Jun 1, 2019, 7:43 AM IST

Published : Jun 1, 2019, 7:43 AM IST

உலகக் கோப்பையில் மோசமான சாதனையை பதிவு செய்து பாகிஸ்தான்

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி, நாட்டிங்ஹாமில் நேற்று நடைபெற்றது.
இதில், பாகிஸ்தான் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது.

இமாம்-உல்-ஹக், ஃபகர் சமான் என முற்றிலும் இளம் வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அந்த அணியில் ஃபகர் சமான், பாபர் அசாம், முகமது ஹஃபிஸ், வஹாப் ரியாஸ் ஆகியோரைத் தவிர மற்ற ஆறு வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.


பாகிஸ்தான் அணி, 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் தனது இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனையை படைத்தது.

27 வருடங்களுக்கு முன் 1992இல், பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 74 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, தனது முதல் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details