தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சென்னை வந்தடைந்த ஒரு லட்சம் பி.சி.ஆர் சோதனைக் கருவிகள்

சென்னை : கோவிட்-19 கண்டறியும் பரிசோதனைகளை அதிகரிக்க தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்த ஒரு லட்சம் பி.சி.ஆர் சோதனைக் கருவிகள் சென்னை வந்தடைந்தன.

By

Published : Jul 5, 2020, 9:37 PM IST

சென்னை வந்தடைந்த ஒரு லட்சம் பி.சி.ஆர் சோதனை கருவிகள்!
சென்னை வந்தடைந்த ஒரு லட்சம் பி.சி.ஆர் சோதனை கருவிகள்!

உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் மூன்றாம் கட்ட சமூக பரவல் நிலையை எட்டியுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மிகத் தீவிரமடைந்து வருகின்ற கரோனா தொற்றின் காரணமாக நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் 700க்கும் மேற்பட்ட இடங்கள் அதிக பாதிப்பைக் கொண்டிருக்கும் சிவப்பு குறியீட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 13 லட்சத்து 41 ஆயிரத்து 715 பேரிடம் கோவிட்-19 கண்டறிதல் சோதனை நடத்தப்பட்ட நிலையில், மக்கள் அனைவரிடமும் கோவிட்-19 கண்டறிதல் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதனையடுத்து, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை முழு வீச்சில் பரிசோதனைகளை வேகப்படுத்த முடிவெடுத்து, ஒரு லட்சம் பி.சி.ஆர் கருவிகள் வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. தென் கொரியா நாட்டின் நிறுவனத்திடம் இருந்து ஒரு லட்சம் பி.சி.ஆர் கருவிகள் இன்று (ஜூலை5) சென்னைக்கு வந்தடைந்துள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்த தொற்று ஏற்பட்டுள்ளவர்களை விரைந்து பரிசோதனைகள் மூலம் கண்டறிய இந்த பி.சி.ஆர் மருத்துவ பரிசோதனை கருவிகள் பெரிதும் பயன்படுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details