தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

இடஒதுக்கீடு : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை: இடஒதுக்கீடு கணக்கீட்டில் பழைய முறையே தொடர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இடஒதுக்கீடு : பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் கடிதம்
இடஒதுக்கீடு : பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் கடிதம்

By

Published : Jul 8, 2020, 9:01 PM IST

ஓபிசி பிரிவினருக்கு தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீடு முறையை மத்திய அரசு பணியிலும் பின்பற்ற வேண்டும் என்று பிரமதர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, அவர் எழுதியுள்ள கடிதத்தில், “அரசு பணிகளில் 27% ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் தமிழ்நாடு அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு கிரீமி லேயரில் ஊதியம் மற்றும் வேளாண் வருமானத்தை கணக்கிடக் கூடாது.

கிரீமி லேயரில் திருத்தம் கொண்டு வந்தால் தகுதியானவர்களும் பாதிக்கப்படுவார்கள். கிரீமி லேயருக்கான வருமானத்தை கணக்கீடும்போது, பெற்றோரின் ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தை சேர்க்க கூடாது. பெற்றோரின் குறைந்தபட்ச ஆண்டு வருமானத்தை மட்டும் கணக்கில் கொண்டு ஓ.பி.சி கிரீமி லேயரை கணக்கிட வேண்டும்.

கல்வி, வேலைவாய்ப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கான கிரீமி லேயர் வரம்பிற்கான புதிய திருத்தத்தை கைவிட வேண்டும். ஓ.பி.சி பிரிவினரில், கிரீமி லேயருக்கான வருமான உச்சவரம்பு தொடர்பான புதிய மாற்றத்தை திரும்ப பெற வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details