2019ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் ஆக்லாந்து நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரணாய், ஜப்பானின் கன்ட்டா சுனேயமா (Kanta Tsuneyama) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
பேட்மிண்டன்: காலிறுதி சுற்றில் ஹெச்.எஸ்.பிரணாய் தோல்வி
நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிச் சுற்றில், இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரணாய் ஜப்பானின் கன்ட்டா சுனேயமா உடன் மோதி தோல்வி அடைந்தார்.
பேட்மிண்டன்: காலிறுதி சுற்றில் ஹெச்.எஸ்.பிரணாய் தோல்வி
ஆட்டத்தின் முதல் செட்டை 21-17 என்ற கணக்கில் வென்ற பிரணாய், இரண்டாவது செட்டை 15-21 என்ற கணக்கில் பறிகொடுத்தார். இதனால், ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் பரபரப்பான மூன்றாவது செட் போட்டியில், பிரணாய் 14-21 என்ற கணக்கில் கன்ட்டா சுனேயமாவிடம் தோல்வி அடைந்தார். இதன் மூலம், பிரணாய் 21-17, 15-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.