தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'கரோனா தானாக குறைந்துவிடும் என்று நினைப்பது தவறு'-  கதிர் ஆனந்த் எம்.பி!

திருப்பத்தூர் : ஊரடங்கால் கரோனா தொற்று தானாக குறைந்துவிடும் என்று நினைப்பது தவறு என திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் தெரிவித்தார்.

'கரோனா தானாக குறைந்துவிடும் என்று நினைப்பது தவறு'- எம் பி கத்தி ஆனந்த்!
Kathir anand

By

Published : Jul 2, 2020, 11:54 PM IST

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா நடவடிக்கை செயல்பாடு குறித்து திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை இருவரும் இணைந்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருளிடம் கரோனா சிகிச்சை குறித்தான சந்திப்பு நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கதிர் ஆனந்த் கூறுவதாவது, "தமிழ்நாட்டில் கரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. தமிழ்நாடு அரசு ஊரடங்கு என்ற பெயரில், பொது மக்களை வாட்டி வதைக்கின்றன. ஊரடங்கால் கரோனா தானாக குறைந்து விடும் என்று நினைப்பது தவறு.

பொதுமக்களின் வாழ்வாதாரத்தை குறித்து மனுக்களைப் பெற்றுக் கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளோம். ஆனால், அதை கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

சென்னையில் மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், புதியதாக உருவாகி மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்றுள்ள, இந்த சூழ்நிலையில் தொற்று வந்து பெருமளவில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில் மாவட்ட ஆட்சியர் எந்த வகையான பணிகளை மேற்கொண்டு இருக்கிறார் என்று விசாரித்தோம். அவர் ஒரு நாளைக்கு 300 பேர் வீதம் பரிசோதனை செய்கிறோம் என்று தகவலைக் கூறினார்.

ஆனால், அது எங்களுக்குத் திருப்திகரமான பதிலாக தெரியவில்லை. சில நாள்களுக்கு முன்பு ஒரு கோடிக்கும் மேலான கரோனா நோய் பரிசோதனைக் கருவிகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சூழ்நிலையில், வெறும் 300 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது என்பது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

அதிகாரத்தில் இருப்பவர்கள் எதிர்க்கட்சிகளுடைய ஆலோசனையைக் கேட்டு நடக்க வேண்டும். ஸ்டாலின் சொன்னாலும்கூட, அதிமுகவினர் தன்னிச்சையாக பல்வேறு விளம்பர நடவடிக்கைகளை மட்டும் செய்துகொள்கிறார்கள்.

அது போதுமானதாக இல்லை. மந்தமான சூழ்நிலையிலேயே கரோனா தொற்று பரிசோதனை நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இது கண்துடைப்புக்காக விரட்டுவதைப் போல் இருக்கிறது. மக்களுக்காக அதிமுகவினர் கவலைப்படவில்லை.
மந்தமான சூழ்நிலையைத் தவிர்த்து விரைவாக செயல்பட்டு, மக்களைப் பாதுகாக்க வேண்டும். இதுவே, திமுக அரசின் தலையாய நோக்கமாக உள்ளது" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details