12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசரஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 51ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
மும்பை 162 ரன்கள் குவிப்பு!
ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்களை குவித்துள்ளது.
இதில், டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க வீரர் டி காக்கின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது. 58 பந்துகளை எதிர்கொண்ட டி காக் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 69 ரன்களுடன் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். ஹைதராபாத் அணி தரப்பில் கலீல் அகமது மூன்று, புவனேஷ்வர் குமார், முகமது நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.