தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சுபகாரியங்களை திருமண மண்டபத்தில் நடத்தக்கூடாது: விழுப்புரம் காவல் துறை

விழுப்புரம்: ஊரடங்கைத் தளர்த்துவதற்கான மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் சுபகாரியங்களை திருமண மண்டபத்தில் நடத்தக் கூடாது என விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுபகாரியங்களை திருமண மண்டபத்தில் நடத்தக்கூடாது - மாவட்ட காவல்துறை
சுபகாரியங்களை திருமண மண்டபத்தில் நடத்தக்கூடாது - மாவட்ட காவல்துறை

By

Published : Jun 25, 2020, 10:51 AM IST

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி தொற்றிலிருந்து தங்களைத் தாமே பாதுகாத்துக் கொள்வது அவசியம்.

தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் திருமணம், இதர நிகழ்ச்சிகளைத் திருமண மண்டபங்களில் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எனவே, கரோனாவைக் கட்டுப்படுத்த தற்போது எடுத்துவரும் போர்க்கால நடவடிக்கைகளை மதிக்காமல் திருமண மண்டபங்களை வாடகைக்கு விடும் நபர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

மேலும், பொதுமக்கள் ஊரடங்கைத் தளர்த்துவதற்கான மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் தங்கள் இல்ல சுபகாரியங்களை திருமண மண்டபத்தில் நடத்தக் கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்று விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திருவாமத்தூரில் உள்ள சீனிவாச திருமண மண்டபத்தில் அரசின் உத்தரவை மீறி திருமணம் நடத்த அனுமதி அளித்துவந்த உரிமையாளர் ராஜ்குமார் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் மண்டபம் மறு உத்தரவு வரும்வரை சீல்வைக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details