தமிழ்நாடு

tamil nadu

பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட குஷ்பு!

பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து, நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்டுள்ளார்.

By

Published : Jun 10, 2020, 5:29 PM IST

Published : Jun 10, 2020, 5:29 PM IST

Updated : Jun 10, 2020, 7:39 PM IST

குஷ்பு
குஷ்பு

கரோனா அச்சுறுத்தலால் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சின்னத்திரை படப்பிடிப்புகள் சுமார் 70 நாட்களுக்குப் பிறகு இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இதனிடையே சின்னத்திரை சங்கத்தின் செயலாளர் குஷ்புவின் ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. அந்த ஆடியோவில் "கரோனாவை தவிர பத்திரிகையாளர்களுக்கு எழுத எதுவும் இல்லாததால் இனி படப்பிடிப்பில் கவனம் செலுத்துவார்கள். போட்டோ, வீடியோ எடுக்க காத்திருக்கிறார்கள், ப்ளீஸ் பத்திரம்" எனப் பேசியிருந்தார்.

இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "நான் ஊடகங்களைப் பற்றி பேசியதாக ஒரு வாய்ஸ் மெசேஜ் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. அதை எங்கள் தயாரிப்பாளர் குழுவிலிருந்து யாரோ எடிட் செய்து அனுப்பி உள்ளனர். எங்களுக்கு மத்தியில் இப்படி மலிவாக யோசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்து வெட்கப்படுகிறேன். எனது நோக்கம் தெளிவானது. ஊடகங்களை அவமதிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் நான் பேசவில்லை. அது நண்பர்களிடம் நாம் பேசும் தொனிதான். ஊடகங்கள் மீது நான் கொண்டுள்ள மதிப்பு அனைவருக்கும் தெரியும்.

பத்திரிகையாளர்கள் சிலரே அதற்கு சாட்சி. திரைத்துறையில் இந்த 34 வருடங்களில் ஒரு முறைகூட நான் அவர்களிடமோ, அவர்கள் குறித்தோ மரியாதை குறைவாக பேசியதில்லை. அந்த வாய்ஸ் மெசேஜ் அரைகுறையாக உள்ளது. இருப்பினும் உங்களில் யாரையாவது அது காயப்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

குஷ்பு பதிவு

துரதிஷ்டவசமாக, நீங்கள் யாருக்காக பணிபுரிகிறீர்களோ அவர்கள்தான் உங்களை முதுகில் குத்த முயல்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். எந்தத் தயாரிப்பாளர் இதை செய்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ஆனால் அவர் யாரென்று நான் சொல்ல மாட்டேன். எனது அமைதியும் மன்னிப்புமே அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை. செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளன. நான் அதைத் தொடர்வேன்" எனத் தெரிவித்துள்ளார்

Last Updated : Jun 10, 2020, 7:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details