தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வித்தியாசமான முறையில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்!

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் அவரின் படப் பாடலை வயலின் மூலம் வாசித்து அசத்தியுள்ளார்.

By

Published : Jun 22, 2020, 5:57 PM IST

 கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

தளபதி விஜய் இன்று தனது 46ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடிவருகின்றனர்.

அவருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிவருகின்றனர்.

அந்தவகையில் நடிகை கீர்த்தி சுரேஷ், தளபதி விஜய்க்கு வித்தியாசமாக வாழ்த்து கூறியுள்ளார். அதாவது விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலை கீர்த்தி சுரேஷ் வயலினில் வாசித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

ABOUT THE AUTHOR

...view details