தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 19, 2020, 1:50 PM IST

ETV Bharat / briefs

இணையதளத்தைக் கலக்கும் 'எமர்ஜென்சி'

எமெர்ஜென்சி என்ற இணையத் தொடர் இணையதளத்தில் தற்போது வைரலாகிறது.

எமர்ஜென்சி வெப் சீரிஸ்
எமர்ஜென்சி வெப் சீரிஸ்

ஒரு படைப்பு மக்களின் நலம் சார்ந்ததாக இருக்கும்போது நிச்சயமாக அது பேசப்படும். அப்படி அதிக மக்களால் கொண்டாடப்பட்ட வெப்சீரிஸ்தான் எமெர்ஜென்சி.

சுகாதாரம் தொடர்பாக நமக்கு எந்த எமெர்ஜென்சி சூழலும் வரக்கூடாது என்ற விழிப்புணர்வோடு தயாரிக்கப்பட்ட இந்த இணையத் தொடர், புட் சட்னி யூ-ட்யூப் தளத்தில் வெளியாகியுள்ளது. மொத்தம் எட்டு எபிசோட்களைக் கொண்ட இந்த இணையத் தொடர் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ள இதில் 'புட் சட்னி' தீப்ஷீ, ஆர்.ஜே. ஆனந்தி, அனிதா சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மதுரை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 10 நாள்களில் படமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details