தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

தஞ்சாவூர்: கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 5 லட்சத்து 9 ஆயிரத்து 530 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூபாய் 5,09,530 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் வழங்கினார்
கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூபாய் 5,09,530 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் வழங்கினார்

By

Published : Jun 24, 2020, 5:13 PM IST

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளர் சமூகப் பாதுகாப்புத் துறை சார்பில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 5 லட்சத்து 9 ஆயிரத்து 530 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் தொழிலாளர் சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில் பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் ஐந்து நபர்களுக்கு தலா 1,906 மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள், தஞ்சாவூர் கீழவஸ்தாசாவடியைச் சேர்ந்த ஜானகிராமன் எனும் கட்டுமானத் தொழிலாளர் பணியின்போது மின் விபத்து ஏற்பட்டு இறந்ததன் காரணமாக, அவரின் தந்தை ராஜேந்திரன், தாயார் சித்ரா ஆகியோரிடம் நிவாரணத் தொகையாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் வழங்கினார்.

தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் திருவையாறு வட்டாரம், திருவையாறு கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்பவருக்கு அங்கன்வாடி உதவியாளர் பதவிக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையையும் அவர் வழங்கினார். இந்நிகழ்வுகளின்போது தொழிலாளர் சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவி ஆணையர் தனபாலன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details