பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகத்தில் இன்று(ஜூலை 15) நடைபெற்றது.
98 உதவி ஆய்வாளர்களுக்குப் பணி நியமன ஆணையை வழங்கிய துணை முதலமைச்சர்!
சென்னை : தமிழ்நாடு அரசின் தணிக்கைத்துறையில் பணியாற்ற 98 உதவி ஆய்வாளர்களுக்குப் பணி நியமன ஆணையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வழங்கினார்.
98 உதவி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய துணை முதலமைச்சர்!
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை மற்றும் மாநில அரசு தணிக்கைத்துறையில் பணியாற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 98 உதவி ஆய்வாளர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.