கரோனா வைரஸ் தொற்றால் தேனி மாவட்டத்தில் இதுவரை 477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 143 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 332 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் - தேனியில் ஓபிஎஸ் ஆலோசனை
தேனி: மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.
தேனி மாவட்டத்தில் நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரித்ததால் ஜூன் 24ஆம் தேதி முதல் மாவட்ட நிர்வாகம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்நிலையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.