தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கரோனா தடுப்பு நடவடிக்கை: சென்னையில் 504 மருத்துவ முகாம்

சென்னை : சென்னை முழுவதும் ஒரே நாளில் 504 மருத்துவ முகாம் நடைபெற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் 504 மருத்துவ முகாம்
சென்னையில் 504 மருத்துவ முகாம்

By

Published : Jul 10, 2020, 4:34 AM IST

கரோனா வைரஸ் சென்னையில் அதிதீவிரமாக பரவிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

மேலும் மாநகராட்சி சார்பில் முகக்கவசம் வழங்குதல், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அதன் ஒரு பகுதியாக அனைத்து மண்டலங்களிலும் மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் பரிசோதனை மையங்கள் அமைத்து மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இந்நிலையில் நேற்று (ஜூலை9) மட்டும் 504 மருத்துவ முகாம் 15 மண்டலங்களில் நடைபெற்றது. இதில், 29ஆயிரத்து 117 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக அண்ணா நகரில் 66 மருத்துவ முகாம்களும் தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கத்தில் 45 மருத்துவ முகாம்களும் நடைபெற்றன.

இதில், பரிசோதனை மேற்கொண்டவர்களில் ஆயிரத்து 831 பேருக்கு சிறிய அறிகுறி இருந்ததால் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இன்று (ஜூலை10) மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களிலும் 521 மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details