தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நலத்துடன் திரும்பிய கரிபிய இளவரசர்

மும்பை: நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான், தற்போது நலமுடன் திரும்பினார்.

நலத்துடன் திரும்பிய கரிபியன் இளவரசர்

By

Published : Jun 26, 2019, 9:18 PM IST

வெஸ்ட் இண்டீஸ் (கரிபியன்) அணியின் முன்னாள் கேப்டன் லாரா, தலை சிறந்த கிரிக்கெட் ஜாம்பவானாக திகழ்ந்தார். இவர், சமீபகாலமாக மும்பையில், உலகக்கோப்பை தொடர் குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், நேற்று உடற்பயிற்சி மையத்தில் இருந்த இவருக்கு, திடீரென நெஞ்சி வலி ஏற்பட்டது. இதனால், இவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையடுத்து, தான் நலமுடன் இருப்பதாகவும், எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் லாரா ஆடியா ஒன்றை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, பூரண குணமடைந்த லாரா இன்று மருத்துவமனையில் இருந்து தான் தங்கியிருந்த வீட்டுக்கு திரும்பினார்.

ABOUT THE AUTHOR

...view details