ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த 12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது. இதில், லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங், பவுலிங் என அனைத்துப் பிரிவுகளிலும் அசத்தியதால், இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
ஃபீல்டிங்கில் மரணமாஸ் காட்டிய பென் ஸ்டோக்ஸ்
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பிடித்த கேட்ச் இணையதளத்தில் வைரலாகிவருகிறது.
ஃபீல்டிங்கில் மரணமாஸ் காட்டிய பென் ஸ்டோக்ஸ்
பேட்டிங், பவுலிங் மட்டுமில்லாமல், பென் ஸ்டோக்ஸ் ஃபீல்டிங்கிலும் அசத்தியுள்ளார். இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷித் வீசிய 35ஆவது ஓவரை, தென்னாப்பிரிக்க வீரர் ஃபிலுக்வாயோ எதிர்கொண்டார். ரஷித் வீசிய பந்தை ஸ்வீப் ஷாட்டாக ஃபிலுக்வாயோ அடித்த பந்தை, மிட் விக்கெட் திசையில் ஃபீல்டிங் செய்துக் கொண்டிருந்த, பென் ஸ்டோக்ஸ் தனது ஒரே கையில் அந்தரத்தில் தாவிப் பிடித்து மிரட்டினார். தற்போது, பென் ஸ்டோக்ஸின் சூப்பர்மேன் கேட்ச் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.