தமிழ்நாடு

tamil nadu

நிரந்தரமாக மூடப்படும் ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர்!

சென்னையில் புகழ்பெற்ற ஏவிஎம் நிறுவனத்தின் ராஜேஸ்வரி திரையரங்கம் நஷ்டத்தின் காரணமாக நிரந்தரமாக மூடப்படுவது திரை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Jun 21, 2020, 4:27 AM IST

Published : Jun 21, 2020, 4:27 AM IST

Rajeswari
Rajeswari

தமிழ்நாட்டில் 1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திரையரங்கம் ஏவிஎம் ராஜேஸ்வரி. கடந்த சில தினங்களாக ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் மூடப்படுவதாகத் தகவல்கள் உலா வந்தன. ஆனால் முறையாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் ஏவிஎம் நிறுவனம் ராஜேஸ்வரி திரையரங்கம் நஷ்டத்தில் இருப்பதால் அதனை நிரந்தரமாக மூட முடிவுசெய்துள்ளதாக கூறியுள்ளது. இதேபோன்று, வட சென்னையில் கடந்த 70 ஆண்டுகளாக இயங்கிவந்த மகாராணி திரையரங்கமும் நஷ்டத்தின் காரணமாக நிரந்தரமாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரையரங்கத்தின் உரிமையாளர் தனது இறுதிக்காலம் வரை திரையரங்கை நடத்த வேண்டும் என்ற முனைப்போடு, நஷ்டம் ஏற்பட்டாலும் சமாளித்து நடத்திவந்தார். ஆனால், கடந்த ஆண்டு மட்டுமே சுமார் 45 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால், மகாராணி திரையரங்கின் உரிமையாளர் அதனை நிரந்தரமாக மூட முடிவுசெய்ததாகக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details