தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வருவாய் அலுவலகம் முன்பு விவசாயி தற்கொலை - சிக்கியது கடிதம்!

ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள வருவாய் அலுவலகம் முன்பாக விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவரிடமிருந்து கிடைத்த கடிதத்தை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

வருவாய் அலுவலகம் முன்பு விவசாயி தற்கொலை
விவசாயி தற்கொலை

By

Published : Jun 21, 2020, 9:57 AM IST

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ரெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜி ரெட்டி. தனது தந்தை பெயரிலுள்ள 1.20 ஏக்கர் விவசாய நிலத்தை தனது பெயருக்கு மாற்றக்கோரி வருவாய் அலுவலருக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளார்.

இதற்காக துறை சார்ந்த அலுவலர்களுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் அலுவலர்கள் ராஜி ரெட்டியை இழுத்தடித்துள்ளனர். இதனால், மனவுளைச்சலான அவர், வருவாய் அலுவலகம் முன்பாக பூச்சிமருந்தை அருந்தி தற்கொலை செய்துகொண்டார். அவரிடம் கிடைத்த கடிதத்தில், எனது இறப்பிற்கு வருவாய் அலுவலர்கள்தான் காரணம் என குறிப்பிட்டிருந்ததாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

காவல் துறையினர் விவசாயி ராஜியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விவசாயி குற்றஞ்சாட்டிய வருவாய் அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details