திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 534ஆக இருந்தது, மேலும் இன்று புதிதாக 99 பேருக்கு நோய் தொற்று உறுதியானது, மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 633ஆக அதிகரித்துள்ளது.
நேற்று வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 107ஆக உள்ளது, சிகிச்சை பலனின்றி 18 பேர் உயிரிழந்தனர்.
சென்னையிலிருந்து வந்த 3 பேர், பெங்களூரிலிருந்து வந்த 11 பேர், வேலூர் மற்றும் மும்பையிலிருந்து வந்த தலா ஒருவர், புதுச்சேரியிலிருந்து வந்த 2 பேர், புறநோயாளிகள் பிரிவிலிருந்து 43 பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 24 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற 7 பேர், முன் களப்பணியாளர் ஒருவர், மற்ற மாவட்டங்களிலிருந்து அனுப்பப்பட்ட 6 பேர் உள்ளிட்ட 99 பேருக்கு இன்று நோய்தொற்று ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காட்டாம்பூண்டி, ஆக்கூர் , பெருங்காட்டூர், கிழக்கு ஆரணி, சேத்துப்பட்டு, வந்தவாசி, வேட்டவலம், வெம்பாக்கம், போளூர், புதுப்பாளையம், தெள்ளார், திருவண்ணாமலை நகராட்சி உள்ளிட்ட இடங்களை சேர்ந்த 99 பேர் இன்று நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை நேற்று சற்று குறைந்து 38ஆக இருந்தது, எனினும் இன்று எண்ணிக்கை 99ஆக அதிகரித்திருப்பதன் மூலம் வைரஸ் பரவல் கட்டுக்குள் வரவில்லை என்பதையே காட்டுகிறது.