மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறியதாவது, "மகாராஷ்டிராவில் மூன்றாயிரத்து 661 காவலர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 42 காவலர்கள் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கரோனா தொற்று காரணமாக ஆறு லட்சத்து 17 ஆயிரத்து 242 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 730 பேர் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மாநில அரசு 134 நிவாரண முகாம்களை நடத்திவருகிறது. அங்கு நான்காயிரத்து 437 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டு, உணவு உள்ளிட்ட பிற தேவைகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க அமல்படுத்திய ஊரடங்கை மீறியதாக, ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 396 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில், 26 ஆயிரத்து 887 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 82 ஆயிரத்து 344 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதிகளை மீறிய நபர்களிடமிருந்து, இதுவரை ஏழு கோடியே 65 லட்சம் ரூபாய்க்கும் மேல் காவல் துறையினர் அபராதம் வசூலித்துள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க:இலவச மருத்துவ ஆலோசனை வழங்க முன்வாருங்கள் : டாக்டர்களுக்கு அழைப்பு விடுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்