இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து ஏா் இந்தியா சிறப்பு விமானம் மூலம் 146 பேர் சென்னை விமான நிலையம் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் ஆண்கள் 88 பேர், பெண்கள் 48 பேர், சிறுவா்கள் ஒன்பது பேர், ஒரு குழந்தை ஆவர். அவர்களை வரவேற்ற அரசு அலுவலர்கள், அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை முடிந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 327 இந்தியர்கள் மீட்பு
சென்னை: இங்கிலாந்து, சிங்கப்பூரில் சிக்கித் தவித்த 327 பேர் மீட்கப்பட்டு இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
அவர்களில் இலவச தங்குமிடங்கள் கேட்ட நான்கு போ் காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் தனியார் மருத்துவக் கல்லூரியிலும், கட்டணம் செலுத்தும் தங்குமிடங்களில் 141 பேரும் தங்கவைப்பட்டுள்ளனர். மேலும், மருத்துவ காரணங்களுக்காக சிறப்பு அனுமதி பெற்று சென்னையில் உள்ள வீட்டுக்கு ஒருவர் அனுப்பப்பட்டார்.
சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் 181 பேர் சென்னை விமானநிலையம் வந்தனர். அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவா்களில் இலவச தங்குமிடங்கள் கேட்ட 90 பேர் தண்டலம் தனியார் மருத்துவக் கல்லூரி விடுதிக்கும், கட்டணம் செலுத்தும் தங்குமிடம் பேர் 91 பேர் ஹோட்டல்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர்.