தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கல்யாண் சிங் பெயரில் புற்றுநோய் மையம் - யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புற்றுநோய் மையம், அரசு மருத்துவக் கல்லூரிக்கு கல்யாண் சிங் பெயர் சூட்டப்படும் என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

By

Published : Aug 26, 2021, 3:14 PM IST

Kalyan Singh
Kalyan Singh

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கல்யாண் சிங் ஆகஸ்ட் 21ஆம் தேதி மறைந்தார். அவரது இறுதி சடங்கு லக்னோவில் நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் கல்யாண் சிங்கிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

ராம் ஜென்ம பூமி இயக்கத்தில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட கல்யாண், அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நிகழ்ந்தபோது மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். இதற்காக அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.

இந்நிலையில், அயோத்தியில் புதிதாகக் கட்டப்படும் ராமர் கோயில் செல்லும் சாலைக்கு கல்யாண் சிங் பெயர் சூட்டப்படும் என மாநில அரசு தெரிவித்திருந்தது. அத்துடன் அலிகர் விமான நிலையத்திற்கு அவரது பெயரை வைக்கவும் அரசு பரிசீலித்துவருகிறது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள புற்றுநோய் மையத்திற்கும், புலந்த்ஷாஹரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கும் கல்யாண் சிங் பெயர் வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இம்முடிவை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆப்கனிலிருந்து மக்களை மீட்பதே அரசின் நோக்கம் - அமைச்சர் ஜெய்சங்கர்

ABOUT THE AUTHOR

...view details