தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 4, 2021, 7:09 AM IST

ETV Bharat / bharat

உத்தரப் பிரதேசத்தில் பகுதிநேர ஊரடங்கு நீட்டிப்பு!

லக்னோ: பகுதிநேர ஊரடங்கு உத்தரவை வரும் மே 6 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

corona curfew
பகுதிநேர ஊரடங்கு நீட்டிப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் பகுதிநேர ஊரடங்கு உத்தரவை வரும் மே 6ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த காலகட்டத்தில், அனைத்து கடைகளும், சந்தைகளும் மூடப்பட்டிருக்கும், ஆனால் காய்கறிகள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும்.

மேலும் பொது, தனியார் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து கடைகள், எரிவாயு முகவர் நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள் திறந்திருக்கும் என தெரிவித்தார்.

இதற்கிடையில், நாட்டை அழிக்கும் இந்த கரோனா தொற்றுக்கு எதிரான போரில் வர்த்தகர்களும் தங்கள் பங்களிப்பை தர வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனா தொற்று பரவல்: புதிய கட்டுப்பாடுகள் அறிவித்த தமிழ்நாடு அரசு!

ABOUT THE AUTHOR

...view details