இந்திய ராணுவத்தின் 58 பொறியாளர் படைப்பிரிவால் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜம்யாங் செரிங் நம்கியால் கூறுகையில், "இது பொதுமக்கள் பயணிக்கக்கூடிய உலகிலேயே உயரமான சாலையாகும். இதன் உயரம் 18 ஆயிரத்து 600 அடி. இதற்கு முன்னதாக, 18 ஆயிரத்து 380 அடி உயரத்தில் அமைந்த, கர்துங்லா கணவாய் வழியாக சென்ற சாலைதான் உலகிலேயே உயரமான சாலையாக இருந்தது.
இந்த சாலை உள்ளூர்வாசிகளின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும். குறிப்பாக சாகசப் பயணங்களுக்காக லடாக் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, இந்தச் சாலை மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கும்.
இந்த 18,600 அடி உயர சாலையை அமைத்ததற்காக 58 பொறியாளர் படைப்பிரிவிற்கு நன்றி" எனத் தெரிவித்தார்.