ஜெனீவா : இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து பாதுகாப்பானது இல்லை என்றும் குழந்தைகள் முதியவர்கள் உள்ளிட்டோருக்கு அந்த இருமல் மருந்தை கொடுக்க வேண்டாம் என்றும் அதனால் தீவிர பிரச்சினைகள் அல்லது உயிரிழப்புகள் ஏற்படலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.
Guaifenesin syrup TG syrup என்ற மருந்தில் டை எத்திலின் மற்றும் எத்திலின் கிளைகால் ஆகிய ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாகவும் அவை மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய அதிக நச்சுத் தன்மை கொண்டு ரசாயனம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்து விடுத்து உள்ளது.
மார்ஷெல் தீவுகள் மற்றும் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் உள்ள குட்டி நாடான மைக்ரோனிசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மருந்துகளை பரிசோதனை செய்து பார்த்த போது இந்த பாதிப்பு கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த மருந்தை பஞ்சாப்பை சேர்ந்த QP Pharmachem Ltd என்ற நிறவனம் தயாரித்து உள்ளதாகவும், அரியானாவை சேர்ந்த Trillium Pharma என்ற நிறுவனம் மேற்கு நாடுகளுக்கு சந்தைப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்தை உட்கொள்வதால் மனிதர்களுக்கு நச்சுத்தன்மை மற்றும் இறப்பை ஏற்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக ஆஸ்திரேலியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரான சிகிச்சை பொருட்கள் நிர்வாகம் (TGA) தெரிவித்து உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இந்த குற்றச்சாட்டுக்கு மருந்து நிறுவனம் தரப்பில் உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. Guaifenesin syrup TG syrup என்ற இருமல் மருந்து மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளிலும் சந்தைப்படுத்த உரிமை பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.