டெல்லி:இதுதொடர்பாக ஊடகங்களில் பேசிய சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர், 'ஆப்கானிஸ்தான் மக்கள் தங்களது விதியை சுதந்திரமாகத் தீர்மானிக்கும் உரிமையை சீனா மதிக்கிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள சீனத் தூதரகம் தற்போதுவரை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள சீனர்கள், சீனாவுக்குத் திரும்பத் தயாராக உள்ளனர்.
ஆப்கான் நிலையை சீனத்தூதரகம் கூர்ந்து கவனித்துவருகிறது. அங்கேயே இருக்கவிரும்பும் சீனர்களுக்கு தங்குவதற்குத் தேவையான ஆதரவையும், உதவியையும் தூதரகம் வழங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா செய்யவேண்டியது என்ன?
ஆப்கானிஸ்தானில் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய வெளியுறவு கொள்கை ஆலோசகர் சுவரோ கமல் தத்தா, "ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஈரான், மத்திய ஆசியாவிலுள்ள நாடுகளை தாலிபன்களுக்கு எதிராக ஒருங்கிணைக்கவேண்டும். இந்தியா தாலிபன்களுக்கு எதிராக கடுமையான வலுவான நிலையை எடுக்கவேண்டும்.
இந்த விவாகரத்தில் அமெரிக்காவை எதிர்பார்க்கக்கூடாது. ஏனென்றால், மொத்தப் பிரச்னையின் உருவாக்கமே அதுதான்.
ஆப்கானை கரையான்கள்போல் அரித்துவிட்டு, தற்போது நாட்டை விட்டு அமெரிக்கா வெளியேறியுள்ளது. தற்போது, நாம் கடுமையாக நடக்கவில்லை என்றால், நாளை, இது நமக்கு பேரழிவைத் தரும். ஆப்கானும், பாகிஸ்தானும், பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பி அழிவுகளை ஏற்படுத்தும்" என்றார்.