தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

WEEKLY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரை வார ராசிபலன்!

WEEKLY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான 2022ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் வார ராசிபலன்களை காண்போம்.

ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் வார ராசிபலன் இந்த வாரம் எந்த ராசியினருக்கு மிகவும் நன்றாக இருக்கும் WEEKLY HOROSCOPE FOR APRIL 10 TO APRIL 16 IN 2022
ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் வார ராசிபலன் இந்த வாரம் எந்த ராசியினருக்கு மிகவும் நன்றாக இருக்கும்WEEKLY HOROSCOPE FOR APRIL 10 TO APRIL 16 IN 2022

By

Published : Apr 10, 2022, 5:02 AM IST

மேஷம் :மேஷ ராசியினர் இந்த வாரம் தங்கள் குடும்பத்தின் மீது அக்கறை கொள்வார்கள். திருமணமான தம்பதியரின் வாழ்க்கை நன்றாக இருக்கும். அவர்களுக்கிடையேயான நம்பிக்கை அதிகரிக்கும். இந்த வாரம் உங்களின் வாழ்க்கை உறவுமுறை அழகாக இருக்கும். உங்களின் வருமானம் அதிகரிக்கும். வீட்டுச் செலவுகளுக்கு நீங்களும் பங்களிப்பு செய்வீர்கள்.

வேலையில் கவனம் செலுத்துவீர்கள், உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். உங்களின் குடும்பத்தில் நீங்கள் மரியாதைக்குரியவராகத் தென்படுவீர்கள். மூத்த அலுவலர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மாணவர்களைப் பொருத்தவரை, அவர்கள் அர்ப்பணிப்பு தன்மையுடன் படிப்பார்கள். அதனடிப்படையில் நீங்கள் வெற்றியடைவீர்கள்.

ரிஷபம் :இந்த வாரம் ரிஷப ராசியினருக்கு மிகவும் நன்றாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாகவே இருக்கும். நீங்கள் உங்கள் உறவினர்களுக்கு மிகவும் தீவிரமாக அறிவுரை கூறுவீர்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே வேறுபாடுகள் தோன்றும். வாரத் தொடக்கத்தில் நீங்கள் பயணம் மேற்கொள்வீர்கள்.

அதன்மூலம் மன அமைதி பெறுவீர்கள். வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறந்த வாரமாக இருக்கிறது. உடன் பணிபுரிபவர்கள் உடன் சேர்ந்து நீங்களும் நன்றாக வேலை செய்வீர்கள். உங்கள் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். வருமானம் நன்றாக இருக்கும். மாணவர்களைப் பொறுத்தவரை, இந்த வாரம் அவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். மாணவர்கள் நன்றாக படிப்பார்கள். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மிதுனம் :மிதுன ராசியினருக்கு இந்த வாரம் மகிழ்ச்சியும், குதூகலமும் நிறைந்ததாக இருக்கும். வார இறுதி நாள்களில் குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த வாரம் உங்களுக்காக ஒரு நற்செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்கள் தகவல் தொடர்பை நீங்கள் விரிவுபடுத்துவீர்கள். மன வலிமையுடன் இருப்பீர்கள்.

பொருளாதாரநிலை வலுவாகவும் நிலையானதாகவும் இருக்கும். வார நடுப்பகுதியில் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை அனுபவித்து செய்வார்கள். சமுதாயத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். தொழில் புரிபவர்களுக்கு இந்த வாரம் நல்ல முடிவுகள் கிடைக்கும். மாணவர்கள் கவனக்குறைவால் கவலைப்படுவார்கள். இந்த மாதிரியான சூழ்நிலையில் தியானம் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

கடகம் :திருமணமான கடக ராசியினர் தங்கள் திருமண வாழ்க்கையை அனுபவித்து வாழ்வார்கள். பதற்றங்கள் குறைந்து மன அமைதியுடன் அவர்களின் உறவு இருக்கும். நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து உற்சாகத்துடன் வாழ்வீர்கள். உங்களின் தொழில் விரைவாக முன்னேற்றமடையும். வருமானமும் அதிகரிக்கும் செலவுகள் குறையும்.

இருப்பினும், தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதன் மூலம் பணத்தையும் உடல் நலத்தையும் குறைத்துக் கொள்வீர்கள். வேலை செய்பவர்களுக்கு இது சிறந்த வாரமாக இருக்கும். உங்கள் கூர்மையான சமயோசித புத்தியால் உங்கள் வேலையில் வெற்றி காண்பீர்கள். மாணவர்களைப் பொருத்தவரை, தங்கள் படிப்பில் அவர்கள் சற்று கடினமாக கருதுவார்கள். இருப்பினும் நன்றாகப் படித்து நல்ல முடிவைப் பெறுவார்கள். உடல் நிலையைப் பொறுத்தவரை, எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது.

சிம்மம் :இந்த வாரம் சிம்ம ராசியினருக்கு நன்றாக இருக்கும். திருமணமானவர்களின் உறவு நிலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். சிறு சிறு சண்டை சச்சரவுகளுக்கு பிறகு உங்களின் உறவு வலுப்பெறும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சிறந்த வாரமாக இருக்கும். நீங்கள் காதலிப்பவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க எதுவேண்டுமானாலும் செய்வீர்கள். வாரத் தொடக்கத்தில் செலவுகள் அதிகரிக்கும் செலவுகளை கட்டுப்படுத்த நீங்கள் தீவிரமாக முயற்சிக்க வேண்டியிருக்கும். மாணவர்களைப் பொருத்தவரை, படிப்பில் முன்னேற கடுமையாக உழைப்பார்கள். எனவே எதிர்பார்த்த முடிவைப் பெறுவார்கள்.

கன்னி :கன்னி ராசியினரின் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். காதலிப்பவர்கள் தங்களின் பழைய சண்டையிலிருந்து சமாதானமடைந்து ஒன்று சேர்வீர்கள். உங்கள் உறவும் வலுப்பெறும். செலவுகள் அதிகரிக்கும் அது உங்களுக்கு கவலையையும் தலைவலியை ஏற்படுத்தும். வேலை செய்பவர்களுக்கு தங்கள் வேலையில் சிறிது ஏமாற்றம் ஏற்படும்.

ஏனெனில், அவர்களின் அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிவடைந்து இருக்கும். ஆனால், தொழில் புரிபவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். அவர்களின் தொழில் மேலும், மேலும் வளர்ச்சி அடையும். மாணவர்களைப் பொருத்தவரை, சரியான உந்துதலும் முயற்சியும் இருந்தால் எதிர்பார்த்த முடிவைப் பெற முடியும்.

துலாம் :இந்த வாரம் துலாம் ராசியினர் தாங்கள் பணிபுரியும் இடத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். காதலிப்பவர்கள் இந்த வாரம் முழுவதும் அன்புடனும் அனுசரணையுடன் இருப்பார்கள். திருமணமான தம்பதியினரின் வாழ்க்கையும் நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் மனதில் தோன்றும் எல்லா விஷயங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வார். உங்கள் வேலையை நினைத்து தேவையில்லாமல் வருத்தப்படுவீர்கள்.

அதனால் சில பிரச்சினைகளையும் எதிர்கொள்வீர்கள். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்தி செயல்பட்டால் இதைத் தடுக்கலாம். தொழில் வளர்ச்சியடையும். உங்கள் மனதில் தோன்றிய வழியில் உங்கள் தொழிலை நடத்துவீர்கள். அரசாங்கத்திடமிருந்து நல்ல பலன்களையும் பெறுவீர்கள். மாணவர்கள் பாடத்திட்டம் சாராத சில விஷயங்களில் சேர்ந்து மகிழ்ச்சியுடன் செயல்பட்டு வெற்றியும் பெறுவார்கள்.

விருச்சிகம் :திருமணமான விருச்சிக ராசியினருக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றும். ஆனால் இருவரும் கலந்து பேசி அதனை சரி செய்து கொள்வீர்கள். உங்களின் உறவை வலுப்படுத்திக் கொள்வீர்கள். காதலிப்பவர்கள் தங்கள் காதல் உறவில் சில சிக்கல்கள் இருப்பதை உணரலாம். இந்த வார தொடக்கத்தில் இருந்து அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் திரும்புகிறது.

அது உங்கள் வேலையில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற வைக்கும். விரும்பிய இடத்திற்கு வேலை மாற்றமும் ஊதிய உயர்வும் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் தொழிலை மேம்படுத்த சில உத்திகளைக் கையாள வேண்டியிருக்கும். மாணவர்களைப் பொருத்தவரை, தற்போது தங்கள் படிப்பில் சிறு சிறு பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், அவற்றையெல்லாம் தங்களின் கவனத்தாலும் ஞாபகசக்தியாலும் முறியடித்து விடுவார்கள்.

தனுசு :இந்த வாரம் தனுசு ராசியினருக்கு நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் கொஞ்சம் பதற்றம் இருக்கும். திருமணமானவர்களின் வீட்டு வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலை சற்று பாதிக்கப்படும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சிறந்த வாரமாகும். நீங்கள் காதலிப்பவரிடம் அதிக நேரம் பேச வேண்டுமென்று ஆசைப்படுவீர்கள். வாரத் தொடக்கத்தில் நீங்கள் ஒருவித கவலையால் சோர்வாக இருப்பீர்கள்.

புதுப்புது எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றும். ஆனால், பெரிய முடிவுகளை எடுக்க நீங்கள் தயங்குவீர்கள். எனவே, இது பெரிய முடிவுகளை எடுப்பதற்கும் உங்கள் தலைமையில் எதையும் செய்யவும் சரியான நேரம் அல்ல. செலவுகள் குறையும் வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். மாணவர்களைப் பொருத்தவரை, விளையாட்டுத்தனமாக படிப்பார்கள் எதைப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதைப் படிப்பார்கள். அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வார்கள்.

மகரம் :இந்த மாதம் உங்களுக்கு நன்றாகவே இருக்கும். தற்போது நீங்கள் மிகவும் பரபரப்பாக இருப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படுவீர்கள். வாழ்க்கை துணையும் குடும்பத்தினரையும் அவர்களின் தேவை அறிந்து பூர்த்தி செய்து நன்றாக பார்த்துக் கொள்வீர்கள். மேலும், நீங்கள் புதிய வேலையில் பரபரப்பாக இருப்பீர்கள். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் உற்சாகமான வாரமாக இருக்கும்.

நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அதற்கான நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். அவருடனான உறவு வலுவாக இருக்கும். அரசாங்கத்தின் மூலம் பயனடைய வாய்ப்பு இருக்கிறது. இந்த வாரம் தொழில் புரிபவர்களுக்கு பக்கபலமாக இருக்கும். உங்கள் பிரச்சினைகள் எல்லாம் ஒவ்வொன்றாக சரி செய்யப்படும். வேலை செய்பவர்கள் தங்களின் அடுத்த இலக்கை நோக்கிச் செல்வார்கள். வருமானம் அதிகரித்து வருவதால் நிதிநிலை மேம்படும்.

கும்பம் :இந்த வாரம் உங்களுக்கு பலன் தரக் கூடியதாகவே இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கை அன்பும் அன்யோன்யமும் நிறைந்ததாக இருக்கும். இது ஒருவரை ஒருவர் எளிதில் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். ஆனால் சில விஷயங்களுக்கு உங்கள் வாழ்க்கைத் துணை கோபப்படுவார். எப்படி இருந்தாலும் இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். வாரத் தொடக்கத்தில் செலவுகள் அதிகரிக்கும்.

ஆனால், வார நடுப்பகுதியில் எல்லாம் சரியாகிவிடும். வார இறுதியில் தேவையற்ற எண்ணங்களை தவிர்க்க வேண்டும். மற்றபடி இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்கள் வேலையை நேர்த்தியாக செய்து முடிக்க முயற்சிப்பீர்கள், இது உங்கள் வேலையில் சிறந்த முடிவைத் தரும். தொழில் புரிபவர்களுக்கு சிறப்பான வாரமிது. மாணவர்களைப் பொருத்தவரை, பாடங்களை அனுபவித்து படிப்பார்கள்.

மீனம் :இந்த வாரம் மீன ராசியினருக்கு சராசரியாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் உதவியால் பல பெரிய பிரச்சினைகளை சமாளிப்பார்கள். காதலிப்பவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த புதுப்புது உத்திகளை கையாளுவார்கள். வார நடுப்பகுதியில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தற்போது உங்கள் செலவும் அதிகரிக்கும், அதை சரி செய்வது எப்படி என்று தெரியாமல் திணறுவீர்கள். எனவே, நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களைப் பொருத்தவரை, இந்த வாரம் படிப்பதற்கு சிறந்த வாரமாகவே இருக்கும். நீங்கள் நேர்மையுடன் உங்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். உடல்நிலையைப் பொருத்தவரை, உங்கள் உடல்நிலையில் உயர்வு தாழ்வு ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.

இதையும் படிங்க:New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!

ABOUT THE AUTHOR

...view details