கோட்டயம்: திருமணங்கள் என்பது செலவு மிக்க விசேஷ காரியமாகும். மேலும் திருமணங்களின் மொத்த செலவுகளில் ஆடைகளே முக்கியப்பங்கு வகிக்கின்றன.
பலர் ஆடைகளை ஒரு நாள் மட்டுமே அணியப்போகிறோம் என்பதை நன்கு அறிந்தும் அதனை அதிகம் செலவழித்து வாங்குகிறார்கள். அதிகப்பண நெருக்கடியிலும் அவர்கள் விரும்பும் திருமண ஆடையை வாங்க கேரள மாநிலம், எரட்டுபேட்டாவைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர் ஆடை வங்கி ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச்சேர்ந்தவர்கள் திருமண ஆடைகளை வாங்குவதற்காக ‘டிரஸ் பேங்க்’ என்ற முறையை இந்தக் குழுவினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தக் கடையின் சிறப்பு என்னவென்றால் இதற்கென கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என இதனை ஆரம்பித்த மெகரூப் தெரிவித்தார்.
மேலும் இதற்கென சில நபர்களிடையே நடந்த கலந்துரையாடலின்போது இந்த யோசனை தோன்றியது எனவும், சுமார் 10 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுவில் தற்போது சுமார் 250 பேர் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இதுவரை 25 குடும்பங்களில் நடந்த திருமணத்திற்கு உடை வழங்கப்பட்டுள்ளதாகவும், 3000ற்கும் அதிகமான உடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:35 சத்துணவு முட்டைகள் அபேஸ்... காகங்கள் மீது குற்றச்சாட்டு... ஆந்திராவில் வியப்பு...