தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா வந்த 16 மணி நேரத்தில் சிபிஐ முன் ஆஜராக வேண்டும்!- கார்த்தி சிதம்பரத்திற்கு கெடு வைத்த அமலாக்கத்துறை

கார்த்தி சிதம்பரத்தின் மீதான அமலாக்கத் துறையின் வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் இந்தியா திரும்பியதும் அடுத்த 16 மணி நேரத்திற்குள் சிபிஐ முன் ஆஜராக வேண்டும் எனத் தகவல் அளித்துள்ளது.

இந்தியா வந்த 16 மணி நேரத்தில் சிபிஐ முன் ஆஜாராக வேண்டும்!- கார்த்தி சிதம்பரத்திற்கு கெடு வைத்த அமலாக்கத் துறை
இந்தியா வந்த 16 மணி நேரத்தில் சிபிஐ முன் ஆஜாராக வேண்டும்!- கார்த்தி சிதம்பரத்திற்கு கெடு வைத்த அமலாக்கத் துறை

By

Published : May 25, 2022, 5:08 PM IST

டெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டினருக்கு முறைகேடான விசா கொடுத்ததற்கு பணம் பெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரிப்பதற்காக கார்த்தி சிதம்பரம் இந்தியா வந்ததும் அடுத்த 16 மணி நேரத்தில் சிபிஐ முன் ஆஜாராக வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தலைமையகத்தின் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கார்த்தியின் நெருங்கிய நண்பர் பாஸ்கர் ராமனை சிபிஐ கடந்த மே 17ஆம் தேதி சிபிஐ கைது செய்தது.

"கார்த்திக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அவர் இந்தியா வந்த 16 மணி நேரத்திற்குள் சிபிஐ முன் ஆஜராக வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிபிஐ துறை, கார்த்தி சிதம்பரம் இந்தியா வந்த 16 மணி நேரத்திற்குள் விசாரணைக்கு வருமாறு ஏற்கெனவே நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளதால், நாங்கள் அவருக்கு சம்மன் அனுப்பவில்லை என அறிவித்துள்ளது. இந்த உத்தரவை மறுத்து அவர் ஆஜராகத் தவறினால், விசாரணை அறிக்கையில் சேருமாறு அவருக்கு சம்மன் உத்தரவு பிறப்பிக்கலாம்" என்று சிபிஐ அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சென்ற செவ்வாய்க்கிழமை(மே 17) கார்த்தி சிதம்பரம் விசா வழக்கில் தனக்குத் தொடர்பில்லை என்று கூறினார். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் "இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவிற்குப் புறப்பட்டபோது செய்த திட்டத்தின்படி, இன்று நான் வீடு திரும்புகிறேன். மத்திய அரசு மீண்டும் அதன் அமைப்புகளைப் பயன்படுத்தி தீங்கிழைக்கும். முற்றிலும் புனையப்பட்ட குற்றச்சாட்டை என்மீது சாட்டும்'' எனக்கூறியுள்ளார், .

இதையும் படிங்க;கார்த்தி சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details