அமராவதி: ஆந்திர மாநிலம், விஜயநகரம் அருகே உள்ள சிரிபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜோடிக்கு கிராம மக்களே திருமணம் செய்து வைத்துள்ளனர். மணமகன் அண்ணா நாயுடு ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்தவர், மணமகள் மகாலட்சுமி பிறப்பிலேயே மாற்றுத்திறனாளியாவார். இவர்கள் இருவருக்கும் அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து பணம் புரட்டி, திருமணம் செய்து வைத்துள்ளனர்.
மாற்றுத்திறனாளி ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்!
விஜயநகரம் அருகே மாற்றுத்திறனாளி ஜோடிக்கு கிராம மக்களே பணம் திரட்டி, திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
villagers
கிராம பஞ்சாயத்து தலைவர் துலா திருப்பதிராவ், திருமண விழாவில் சுமார் மூன்றாயிரம் பேருக்கு உணவுளிக்க ஏற்பாடு செய்தார். தங்களுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்களுக்கு, மாற்றுத்திறனாளி தம்பதியினர் நன்றி தெரிவித்தனர். கிராம மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடன்பட்டிருக்கிறோம் என தம்பதியினர் உருக்கமாக தெரிவித்தனர்.