உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இன்று (ஏப்.5) லக்னோவிலுள்ள அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
இதையடுத்து அவர் கூறியதாவது, “கரோனா தடுப்பூசியை இலவசமாக கிடைக்க செய்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி” என்றார். மேலும், “பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவேண்டும், கரோனா முன்னெச்சரிக்கையுடன் நாம் செயல்பட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
அதிகரிக்கும் கரோனா பாதிப்பின் காரணமாக, தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், விடுதிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களின் டோக்கன் முறையில் பொதுமக்களுக்கான நேரம் ஒதுக்கக்கோரியும், அதிக ஆள்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது எனவும் காஜியாபாத் மாவட்ட ஆட்சியர் அஜய் சங்கர் பாண்டே உத்தரவிட்டுள்ளார்.
தற்போது, உத்தரப் பிரதேசத்தில் 16 ஆயிரத்து 496 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர் தூக்கிட்டுத் தற்கொலை!