இந்தியாவின் பல முக்கிய நகரங்களும் கடந்த சில ஆண்டுகளாகவே காற்று மாசு காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுவருகின்றன. காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அவை பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
கரோனா ஊரடங்கு காலத்தில் காற்று மாசு குறைந்திருந்த போதிலும், தளர்வுகளுக்கு பின் தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கியதும் காற்று மாசு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தீபாவளியின்போது பட்டாசுகளை வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன்படி உத்தரப் பிரதேச மாநிலத்தில் 13 நகரங்களில் பட்டாசுகளை வெடிக்க அம்மாநில அரசு தடை விதித்திருந்தது. ஆனால், அரசின் இந்த தடை உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்கவில்லை. மாநிலம் முழுவதும் நேற்று (நவம்பர் 14) தீபாவளி பண்டிகையின் போது, பொதுமக்கள் வழக்கம் போல பட்டாசுகளை வெடித்தனர்.