ராஞ்சி:ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள கத்கரஹா பேருந்துநிலையத்தில் பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உயிரிழந்தனர். இவ்விபத்தின்போது பேருந்திற்குள் ஓட்டுநரும் நடத்துநரும் உறங்கிக்கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 1 மணியளவில் விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும், போலீசாரும், தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு சென்று பேருந்தில் இருந்த தீயை அணைத்தனர். பேருந்துக்குள் இருந்து எரிந்த நிலையில் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.