வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 25ஆவது நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தில், விவசாயிகள் குளிர் காரணமாக இதுவரை 30க்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படுகின்றது.
இந்தியா முழுவதும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது, அதேபோல் புதுச்சேரியிலும் மதசார்பற்ற அணி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, உயிரிழந்த விவசாயிகளின் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க:டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி