திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் இன்று (அக்.22) அடையாளம் தெரியாத நபர்கள் சிலரால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியம் 1.30 மணியளவில் அவர் தாக்கப்பட்ட நிலையில் அவரது காரையும் அந்நபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.
சுஷ்மிதா தேவ் கடந்த 12 நாள்களாக ’திரிபுராவிலிருந்து திரிணாமுல்’ எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கட்சியின் திட்டங்கள், செய்திகள் குறித்து திரிபுரா முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
இத்தாக்குதலுக்குப் பின்னால் பாரதிய ஜனதா கட்சிதான் உள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இந்நிலையில், "இந்த காட்டுமிராண்டித் தனமான செயலுக்கு திரிபுரா மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். காவல்துறை வெறும் பார்வையாளர்களாக செயல்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கு நிலை குலைந்துள்ளதை ஏற்க முடியாது” என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"அதான் தடுப்பூசி ஃப்ரியா தரோம்ல" - பெட்ரோல் விலை உயர்வுக்கு பாஜக அமைச்சர் அடடே பதில்