தமிழ்நாடு

tamil nadu

உலக வேளாண் சந்தையில் இந்தியாவின் தரத்தை முன்னிறுத்தும் நேரம் வந்துவிட்டது - பிரதமர் மோடி

By

Published : Dec 25, 2020, 8:03 PM IST

டெல்லி: உலக வேளாண் சந்தையில் சமமான கவுரவத்துடன் இந்தியாவின் தரத்தை முன்னிறுத்தும் நேரம் வந்துவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் அடுத்த தவணை தொகையை விவசாயிகளுக்கு வெளியிட்டதைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, உலக வேளாண் சந்தையில் சமமான கவுரவத்துடன் இந்தியாவின் தரத்தை முன்னிறுத்தும் நேரம் வந்துவிட்டது என தெரிவித்தார்.

வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், "மற்ற துறைகளில் முதலீடுகளும் புதிய கண்டுபிடிப்புகளும் மேம்பட்டுள்ளது. வருவாய் அதிகரித்து இந்தியாவின் தரம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தை சேர்ந்த 70 லட்சம் விவசாயிகளால் இப்பயனை பெற முடியவில்லை. மேற்குவங்கத்தை சேர்ந்த 23 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அதற்கான சரிபார்ப்பு பணிகளை மாநில அரசு நீண்ட நாள்களாக நிறுத்தியுள்ளது.

விவசாயிகளின் நலன் குறித்து அக்கறை கொள்ளாத கட்சி டெல்லிக்கு வந்து விவசாயிகள் குறித்து பேசிவருகிறது. விவசாய உற்பத்தி சந்தை குழு என்ற ஒன்று கேரளாவில் இல்லவே இல்லை. கேரளாவிற்கு சென்று இக்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடுவதில்லை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details