தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் அதிர்ச்சி: சுகாதாரமற்ற குடிநீர் அருந்திய 3 பேர் உயிரிழப்பு!

கர்நாடகா பெங்களூருவில் சுகாதாரமற்ற குடிநீர் அருந்திய மூன்று பேர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு சாலைக்கு நாதுராம் கோட்சே என்று பெயர் சூட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு சாலைக்கு நாதுராம் கோட்சே என்று பெயர் சூட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

By

Published : Jun 6, 2022, 7:16 PM IST

ராய்ச்சூர் (கர்நாடகா):கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தில் விநியோகிப்பட்ட சுகாதாரமற்ற குடிநீரை அருந்தியதில் மூன்று நபர்கள் இன்று (ஜூன் 6) மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் ராய்ச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், 'இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த குடிநீர் வழங்கல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். மழை காரணமாக குடிநீர் குழாய் சேதமடைந்துவிட்டதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ராய்ச்சூர் நகரில் உள்ள வார்டுகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் மாதிரிகளைப் பெற்று பரிசோதனை செய்து சம்பந்தப்பட்ட துறையிடம் சான்றிதழ் பெற அறிவுறுத்தியுள்ளேன்.

மேலும், டிஎஸ்பி தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொள்வர். விசாரணையில் குற்றம்புரிந்தவர்கள் யாரேனும் அலுவலர்களாக இருப்பினும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

சுகாதாரமற்ற குடிநீர் அருந்திய 3 பேர் உயிரிழப்பு

இதையும் படிங்க: சித்து மூஸ்வாலாவின் குடும்பத்தினரை நாளை சந்திக்கும் ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details