சித்ரதுர்கா (கர்நாடகா): உணவு தேடி சிரமப்படும் தெரு நாய்கள் மீது ஏற்பட்ட பாசத்தின் காரணமாக, விஷ்வேஷ்வரய்யா பூங்கா பகுதியில் வசிக்கும் பத்மாவதி எனும் பெண்மணி 80-க்கும் அதிகமான தெரு நாய்களுக்கு தினமும் உணவளித்து வருகிறார்.
தினமும் இருசக்கர வாகனத்தில் பயணித்து, நாய்களை தேடிச் சென்று உணவு வழங்குகிறார். அதேபோல் நாய்களின் உடல்நிலை சரியில்லை என்றால், மருத்துவ உதவி கிடைக்க வழிவகுக்கிறார். பத்மாவதியின் தாயார் இதேபோல் தெரு நாய்கள் மீது பரிவு கொண்டு வளர்த்து வந்தவர். தாய்க்கு பிறகு அந்தப் பணியை பத்மாவதி தொடர்ந்து செய்து வருகிறார்.
காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் நாய்களுக்கு பத்மா உணவளிக்கிறார். அவர் வண்டியின் ஹார்ன் சத்தத்தைக் கேட்டவுடனேயே நாய்கள் விரைந்து ஓடிவருகின்றன. இந்த செயலில் பத்மாவின் மகளும் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்.
தெரு நாய்களுக்கு உணவளிக்கும் பத்மா தற்போதெல்லாம் ஆயிரக்கணக்கில் செலவு செய்து நாய்களை வாங்குகின்றனர். ஆனால், தெரு நாய்களின் நிலை குறித்து யாருக்கும் அக்கறை இல்லை. அதனால் பத்மா தற்போது தனது செல்லப் பிராணிகளை கிராமத்தில் வைத்து பராமரிக்கிறார்.
நாம் தெரு நாய்களுடன் அன்போடு பழகினால், அவைகளும் நம்முடன் அன்போடு பழகும் என்கிறார் பத்மா...