ஹைதராபாத்:14 விளையாட்டு அமைப்புகளின் ஆளுமைகளுக்கு டிசம்பர் மாத இறுதிக்குள் கட்டாயம் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்குப்பின்னர் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா?
அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் பதவிக் காலத்தை அதிகரிக்கக் கோரியை மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே, “பதவிக் காலம் முடிந்த பின்னரும், ஏன் நீங்கள் தேர்தல் நடத்தவில்லை” என்று நேரடியான கேள்வியைக் கேட்டார். ஆனால், இந்தக் கேள்வியால் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே இந்தியக் குத்துச்சண்டை கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் 2020 டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டது. அகில இந்தியச் சதுரங்க கூட்டமைப்பு இரண்டு குழுக்களாகப் பிளவு பட்டுள்ளது. சவ்கான் முகாமை சேர்ந்தவர்கள், எதிர் தரப்பினரின் தேர்தல் முன்மொழிவை எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர்.
விளையாட்டு அரசியல்...
கூட்டமைப்புக்கு இணையதளம் வாயிலாக நடத்தப்படவுள்ள வாக்கெடுப்பு குறித்து சந்தேகங்களையும் எழுப்பியிருக்கின்றனர். இறுதியாக உத்தரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், மிசோரம், நாகலாந்து மற்றும் சிக்கிம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அகில இந்தியச் சதுரங்க கூட்டமைப்பின் முக்கிய பதவிகளுக்கு வந்தனர். சதுரங்க போட்டிகள் தொடர்பான நிகழ்வுகளுக்கும் இந்த மாநிலங்களுக்கும் அவ்வளவாகத் தொடர்பே இருந்ததில்லை.
அகில இந்திய கோல்ஃப் சங்கம் அமைப்புக்கு நடந்த தேர்தலும் சர்ச்சையில் முடிந்திருக்கிறது. ஒரு மாநிலத்தில் குடியிருக்கும் ஒரு நபர் இன்னொரு மாநிலத்தின் பிரதிநிதியாகப் போட்டியிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. விளையாட்டு அமைப்புகளில் அரசு ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்த புதிய விதிமுறைகள் தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்தியத் தேசிய விளையாட்டு கூட்டமைப்பு ஆகியவை கடும் கோபத்தில் உள்ளன.
தேசிய யோகாசன கிரீடா கூட்டமைப்பு என்ற புதிய அமைப்புக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டதை எதிர்த்து நான்கரை ஆண்டுகளே ஆன இந்திய யோகா கூட்டமைப்பு உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. விளையாட்டு எனும் மேம்பாட்டுக்கு முன்னால் நிற்கும் மோசமான சூழல்களுக்கு இவையெல்லாம் உதாரணங்களாக இருக்கின்றன.
தொடர்ச்சியான சரிவுகள்...
சுரினாம், புருண்டி போன்ற சிறிய நாடுகள் கூட ஒலிம்பிக் போட்டிகளில் சாதனை படைக்கும்போது இந்தியா தொடர்ச்சியாக மோசமான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் போதுமான விளையாட்டு மைதானங்கள் இல்லாமலும், விளையாட்டு ஆசிரியர்கள் இல்லாமலும் உள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை.
எதிர்பாராதவிதமாகத் தகுதி வாய்ந்த குழந்தைகள் தங்களின் பெற்றோர் ஆதரவைப் பெற்றிருக்கின்றனர்.தவிர ஸ்பான்சர்களிடம் இருந்து நிதி உதவியைப் பெற்றபோதிலும், தங்களுடைய விளையாட்டு திறன்களை மேலும் முன்னெடுப்பதற்கான அடிப்படை வசதிகள் முறையான பயிற்சியாளர்கள் இல்லாமல் இருக்கின்றனர்.
இளையவர் மட்டத்தில் சாதனைகளை மேற்கொண்ட இளைஞர்கள் மேற்கொண்டு திறமையை முன்னெடுப்பதற்கு விளையாட்டு கூட்டமைப்புகள் மற்றும் சங்கங்களில் அதிகரித்திருக்கும் சுயநல அரசியல் மற்றும் சராசரி அரசியல் தடையாக இருக்கின்றன என்பதற்குப் பல எண்ணிலடங்கா நிகழ்வுகள் முன்னுதாரணங்களாக உள்ளன.
வீரர்களைக் கண்டறிவதில் உள்ள அரசியல் களைக...
சதுரங்கத்தில் அதிசயிக்கத்தக்க திறன் கொண்ட நிஹால் சரின் 2014ஆம் ஆண்டில் 10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் சாம்பியன் ஆனார். 14ஆவது வயதில் கிரான்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றபோதிலும், சாய்னா நேக்வால், பி.வி.சிந்து மற்றும் சானியா மிஸ்ரா போன்ற விளையாட்டில் சிறந்து விளங்கியவர்கள், இந்தியா விளையாட்டு திறனில் பின்தங்கியிருக்கவில்லை என்பதை நிரூபித்தவர்கள்.
விளையாட்டு உலகில் பட்டை தீட்டப்பட்ட பின்னர்தான் கோகினூர் வைரமாக ஜொலிக்க முடியும். எனவே அடிமட்ட அளவில் விளையாட்டு திறன் கொண்டவர்களை அடையாளம் காண்பதில் குறைபாடு நிலவுகிறது.
உலக விளையாட்டு வீரர்கள் தேர்வு
சீனா முதல் ஆஸ்திரேலியா வரை, இங்கிலாந்து முதல் கென்யா மற்றும் ஜமைக்கா வரை அந்தந்த நாடுகளின் தேசிய பெருமை விளையாட்டு அரங்கங்களில் பிரகாசிக்கும் வகையில் இயல்பாகவே திறன் கொண்டவர்களாக இருப்பவர்களைக் கவனமாக அடையாளம் காண்கின்றனர். ஆனால், இதற்கு மாறாக, நமது நாட்டிலோ திட்டமிட்ட உள் நோக்கத்துடன் கூடிய விளையாட்டு மேம்பாட்டை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்தியாவில் உள்ள எண்ணிக்கையற்ற விளையாட்டு கூட்டமைப்புகளும் சங்கங்களும் செயல்படுகின்றன.
சுயநலமற்ற வெளிப்படைத்தன்மை விளையாட்டைக் காக்கும்...
முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி விளையாட்டை முன்னெடுப்பதில் உண்மையான பொறுப்புடைமையுடன் இருப்பதற்கு, விளையாட்டு கூட்டமைப்புகள் மற்றும் சங்கங்களுக்கு உறுதியும் போராடும் உணர்வுமே கடமையாக இருக்க வேண்டும். அப்போது மட்டுமே திறன் மிகுந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவுக்குக் கவுரவத்தை உருவாக்க முடியும்.
விளையாட்டு அமைப்புகளின் ஆளுகைகளில் தகுதி வாய்ந்தவர்களைத் தேர்வு செய்வதாலும் மற்றும் அதன் செயல்பாடுகளில் மேலும் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்து அவற்றை மறு சீரமைத்தால் மட்டுமே விளையாட்டு அமைப்புகளைப் பாதிக்கும் சுயநல அரசியல் எனும் அழுகலிலிருந்து அதனைப் பாதுகாக்க முடியும்.